முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் திமுகவில் இணை இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதனை தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உறுதி செய்து இருக்கின்றார். விரைவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மூன்று அதிமுக எம்எல்ஏக்களும் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த மூன்று எம்எல்ஏக்கள் ஏற்கனவே இணை இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த தகவல் ஆனது வெளியிடப்பட்டிருந்தது.
அந்த தகவல் வெளிவந்த வந்த போது அதிமுக தரப்பிலிருந்து இந்த தகவல் என்பது முற்றிலும் தவறான தகவல், வதந்தி என மறுத்து இருந்தார்கள். இந்த நிலையில் திமுகவினுடைய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் அவர்கள் தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றார். அவர் ஏற்கனவே காலையில் தன்னுடைய ட்விட்டர் வாயிலாக அதிமுகவில் இருந்து மூன்று பேர் திமுகவை நோக்கி வர இருப்பதாக பதிவு செய்தார்.
விரைவில் ஒரு பிரமாண்ட விழாவாக முதலமைச்சர் தலைமையில் இந்த இணைப்பு விழா என்பது நடைபெற இருப்பதாகவும், அந்த விழாவினை அதிமுகவினுடைய அதிருப்தி மூன்று எம்எல்ஏக்கள் கட்சியில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டி சிலதனங்களுக்கு முன்புதான் கோவை நடைபெற்ற நிகழ்ச்சியிலே முதலமைச்சர் முன்னிலையில் கட்சியிலே இணைந்தார்.
அவரோடு ஒரு சிலரும் இணைவார்கள் என அப்போது கூறப்பட்ட நிலையில் அந்த தகவல் தவறான தகவல் என அதிமுக தரப்பில் மறுக்கப்பட்டது, தற்போது மீண்டும் ஒருமுறை அந்த தகவலானது வெளிவரத் துவங்கியிருக்கக்கூடிய நிலையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தகவலை உறுதி செய்திருக்கின்றார்.