Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் பணியில் மும்முரமாக அதிமுக…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து மார்ச் முதல் அல்லது ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அதிமுக விருப்ப மனு வழங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக கழகத்தின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமைக் கழகத்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போட்டியிட விரும்புபவர்கள் 15 ஆயிரம் ரூபாயும்,யில் புதுச்சேரி போட்டியிட விரும்புவர்கள் ஐந்தாயிரம் ரூபாயும், கேரளாவில் போட்டியிட விரும்புவோர் 2,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் இரண்டு கூட்டணியிலும் இன்னும் உறுதியாகாத நிலையில் அதிமுக விருப்ப மனுக்களை விநியோகித்து தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

Categories

Tech |