படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அதிமுக அமைச்சர் வாக்கு சேகரித்து உள்ளார்.
கடந்தாண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் “திரௌபதி”. இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை “ருத்ர தாண்டவம்” என்ற பெயரில் மோகன் ஜி ரீமேக் செய்து வருகிறார்.
இப்படத்தில் ஹீரோவாக ரிச்சர்டு ரிஷியும் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது ராயபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் “ருத்ர தாண்டவம்” படப்பிடிப்பிற்கு சென்று மோகன் ஜியை சந்தித்து வாக்கு சேகரித்து பின் அவரை வாழ்த்தி சென்றுள்ளார்.