அம்மா பிறந்தநாளையொட்டி 10 வருடங்களாக கிணற்றில் மிதந்தவாறு முன்னாள் எம்எல்ஏ கருப்பையா ஜலப்பிரதட்சணம் செய்கிறார்.
முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று அமோகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 2021 ஆம் வருடம் அதிமுக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கருப்பையா கிணற்று நீரில் மிதந்தவாறு அரைமணிநேரம் ஜலபிரதட்சணம் செய்து அசத்தியுள்ளார்.
இவர் அருகிலுள்ள விவசாய கிணற்றில்அரை மணி நேரம் கிணற்றில் மிதந்து இந்த சாகசத்தை செய்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து பத்து வருடங்களாக கருப்பையா கிணற்று நீரில் மிதந்து ஜலப்பிரதட்சணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.