Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் ….!!

சென்னை மாவட்டம் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக சென்னை மாவட்டம் பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் கட்சி பணியை விரைவு படுத்தும் வகையிலும் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை (தெற்கு) , தென் சென்னை (வடக்கு), தென் சென்னை ( தெற்கு) ஆகிய மாவட்டங்கள்  ஆறாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையை பொறுத்தவரை 5 மாவட்டங்களாக அதிமுக செயல்படுகிறது. அந்த அடிப்படையில் தென் சென்னை வடக்கு,  தென் சென்னை தெற்கு மற்றும் வட சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் மேலும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் ஆறு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டு  தற்போது மாவட்ட செயலாளர்களை அதிமுக நியமித்துள்ளது.

வடசென்னை தெற்கு பகுதியினுடைய மாவட்ட செயலாளராக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.  வடசென்னை தெற்கு- மேற்கு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி பாலகங்கா நியமிக்கப்பட்டுள்ளார். தென்சென்னை வடக்கு பகுதியினுடைய மாவட்ட செயலாளராக ஆதிராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |