Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன்; ஓபிஎஸ்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை தொடர்ச்சியாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் வழக்கு நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கக்கூடிய காரணத்தினால், நான் தான் உண்மையான அண்ணா திமுக தலைமை என்று அவர் சொல்லிக் கொண்டு வருகிறார். அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில்,  தற்போது முன்னாள் அமைச்சரும்,  எம்ஜிஆர் காலத்தில் கட்சி ஆரம்பிச்சதிலிருந்து தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து வரக்கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ( அமைப்பு செயலாளர் ) நியமித்துள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சர்ருமான பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அமைப்பு செயலாளராக  நியமித்திருப்பதாகவும், அதற்கு கட்சியின் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதிமுகவில் தொடர்ச்சியாக இரட்டை தலைமை பிரச்சனையானது, ஒற்றை தலைமையாய் நகர்ந்து, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உள்ளது.

இரு நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிச்சாமியை  அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சொல்லிய நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தொடர்ச்சியாக தனக்கான அறிவிப்புகளையும்,  தனக்கான பணிகளையும் ஓ பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். இரண்டு முறை பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்து அவர் பல்வேறு விஷயங்களில் ஆலோசனையை கேட்ட வரும் நிலையில், இப்படி ஒரு அறிவிப்பை பன்னீர்செல்வம் தற்போது அறிவித்திருக்கிறார். ஆகவே அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்து செயல்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Categories

Tech |