Categories
அரசியல்

அதிமுக நாடாளுமன்ற , சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!

அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர்.

Image result for அதிமுக தலைமையில் பிஜேபி

இந்நிலையில் தமிழகத்தில் அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , தமாக 1 , N,.R காங்கிரஸ் ( புதுச்சேரி ) தொகுதியிலும் போட்டியிடுவதாக தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகி , இறுதி செய்யப்பட்டு  சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கூட்டணியில் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பட்டியலை  வெளியிட்டார்.

இதையடுத்து இன்று மாலை அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று திமுக_வும் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவித்ததால் அதிமுகவும் அறிவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மாலையில் இருந்து சுமார் 4 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின்பு அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியது.

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் :

திருவள்ளுவர் – வேணுகோபால்

தென்சென்னை – ஜெயவர்த்தன

காஞ்சிபுரம் – மரகதம் குமாரவேல்

கிருஷ்ணகிரி – கே.பி முனுசாமி

திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஆரணி – ஏழுமலை

சேலம் – சரவணன்

நாமக்கல் – காளியப்பன்

ஈரோடு – மணிமாறன்

திருப்பூர் – ஆனந்தன்

 

நீலகிரி-  தியாகராஜன்

பொள்ளாச்சி – மகேந்திரன்

கரூர் – தம்பிதுரை

பெரம்பலூர் – சிவபதி

சிதம்பரம் – சந்திரசேகர்

மயிலாடுதுறை – ஆசைமணி

நாகப்பட்டினம் – சரவணன்

சரவணன் – ராஜ்சத்யன்

தேனி – ரவீந்திரநாத் குமார்

திருநெல்வேலி – மனோஜ் பாண்டியன்

அதிமுக சார்பில் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் :

பூந்தமல்லி – வைத்தியநாதன்

பெரம்பூர் – ராஜேஷ்

திருப்போரூர் – திருக்கழுகுன்றம் ஆறுமுகம்

சோழிங்கநல்லூர் – சம்பத்

குடியாத்தம் – மூர்த்தி

ஆம்பூர் – ஜோதி ராமலிங்க ராஜ்

ஓசூர் – திருமதி ஜோதி

பாப்பிரெட்டிப்பட்டி – கோவிந்தசாமி

அரூர் – சம்பத்குமார்

நிலக்கோட்டை – தேன்மொழி

திருவாரூர் – ஜீவானந்தம்

தஞ்சாவூர் – காந்தி

மானாமதுரை – நாகராஜன்

ஆண்டிப்பட்டி – லோகி ராஜன்

பெரியகுளம் – முருகன்

சாத்தூர் – ராஜவர்மன்

பரமக்குடி – சதன் பிரபாகரன்

விளாத்திகுளம் – சின்னப்பன்

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |