Categories
அரசியல்

ரூ.17,000,00,00,000 சொன்ன அதிமுக…. ரூ.7,000,00,00,000 சொன்ன திமுக… எல்லாமே ஏமாற்று வேலை ..!!

திமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு ஜிகினா வேலை செய்து கொண்டிருக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அம்மாவுடைய அரசின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்,  6 பவுன் நகை கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அன்றைக்கு உத்தரவிட்டார். சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வந்த ஸ்டாலின் 5 பவுன் என்று சொன்னார்…  அதை வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். 5 பவுன் எவ்வளவு ரூபாய் சொல்கிறார்.  7000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

அப்போது முதல் அமைச்சராக இருக்கின்ற  எடப்பாடி அவர்கள் ஆறு பவுன் நகை தள்ளுபடி செய்யப்படும். அதற்கு தோராயமான மதிப்பு 17 ஆயிரம் கோடி என்று அன்றைக்கு சொன்னார். 17,000 கோடி எங்கே, இன்று 7 ஆயிரம் கோடி என்று சொல்கின்ற இந்த ஏமாற்றுகின்ற அரசு எங்கே. இப்படித்தான் ஒவ்வொரு திட்டத்திலும் இன்றைக்கு இந்த அரசு இந்த மக்களை  ஏமாற்றுகிறது. ஏற்கனவே இந்த அரசு என்பது ஏமாற்று அரசு தான். அது எப்படி இருக்கும் ? அந்த அமைச்சரவையே குற்றவாளிகள் நிறைந்த ஒரு அமைச்சரவை.

குற்றவாளிகள் என்ன செய்வார்கள் ? அவர்கள் குற்றத்தை தான் செய்வார்கள். நல்லவேளை முதலமைச்சராக இருந்தபோது அந்த 11,000 கோடிக்கான விவசாய கடனை கடனை முழுமையாக நம் முதல் அமைச்சராக இருக்கின்ற போதே தள்ளுபடி செய்துவிட்டார். இல்லை என்றால் என்ன ஆகி இருக்கும்…. அதுலயும் உண்மையான விவசாயிக்கு மட்டும் என்று சொல்லி ஒரு ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் தள்ளுபடி செய்திருப்பார்கள், அதுவும் திவாலாகி இருக்கும். திமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு ஜிகினா வேலை செய்து கொண்டிருக்கிறது. வசனங்களை பேசிக்கொண்டிருக்கிறது என சிவி சண்முகம் குற்றம் சாட்டினார்.

Categories

Tech |