நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் 2_ ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18 _ ஆம் தேதி நாடடைபெற்று முடிந்த நிலையில் அறிவிக்கப்படாத 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைதொடரந்து அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சார பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்றும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரதீய ஜனதா மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.