2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெரும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, “அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் உள்ளிட்ட திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.
மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீட்டில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அனைத்து மக்களும் பயனடையும் வகையிலான அறிவிப்புகள் அதிமுக தேர்தல் அறிவிப்பில் இடம்பெறும். இந்நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமையும் என்று கூறியுள்ளார்.