தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் வழங்க அரசு தடை விதிக்கவில்லை, அறிவுறுத்தியது என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர்.
இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக அரசு இந்த உணவு பொருட்களை நேரடியாக யாரும் வழங்கக்கூடாது. உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசுக்கு நிதி அளிக்கலாம், உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என்று உத்தரவிட்டது. இதற்க்கு திமுக, மதிமுக கண்டனம் தெரிவிதத்து.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் அவசர வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை நடைபெற்ற போது, மக்கள் நேரடியாக கொடுப்பதை குறைத்தால் நோய் பரவுவதை கணிசமாக குறைக்க முடியும் என்ற நல்லெண்ணத்தில் தான் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யாருக்கும் தடை விதிக்கவில்லை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, மக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்து பாதுகாப்பாக கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . நேற்று தடை என்று அறிவித்த தமிழக அரசு தற்போது தடை இல்லை என்றும், வெறும் அறிவுறுத்தல் தான் கொடுத்தோம் என்று தீடீர் பல்டி அடித்துள்ளது.