அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக உடைய ஜூலை 11 பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுக்கு முன்பாக இருந்த அதே நிலையை தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தான் இபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமரவுக்கு மேல்முறையீடு போயிருக்காங்க.
நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட அமர்வு இந்த வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் மிக முக்கியமான வாதங்கள் என்னென்ன ? என்றால், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு நிலை தொடரும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கு. தனி நீதிபதியினுடைய உத்தரவு என்பது ஓபிஎஸ் என்ற ஒரு தனி நபருக்கு சாதகமான ஒரு தீர்ப்பாக தான் இருக்கு.
ஒட்டுமொத்த அதிமுகவினுடைய தொண்டர்கள் நலனுக்கு ஆதரவான தீர்ப்பாக இது இல்லை. பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. அதிமுகவின் பொதுக்குழுவில் தான் அனைத்து முக்கியமான முடிவுகளையும் எடுக்கும். அந்த அடிப்படையில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன் வைத்தார்கள்.அந்த அடிப்படையில் இடைக்கால பொதுச் செயலாளராக என்னை தேர்வு செய்து இருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களின் குரலாக பொதுக்குழு உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள்.
ஓபிஎஸ் தரப்பு கேட்காத நிவாரணத்தை தனி நீதிபதி கொடுத்துள்ளார். அதாவது ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையில் தொடர வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கேட்காத ஒரு நிவாரணத்தை நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்திருக்கிறார்கள்.உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு அப்பால், யூகங்கள் அடிப்படையில் தனி நீதிபதியினுடைய உத்தரவு இருக்கின்றது. அதிகாரம் பெற்றவர்கள் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும்.
அந்த அடிப்படையில் தான் ஜூன் 23 , ஜூலை 11 பொதுக்குழு எல்லாம் கூட்டப்பட்டது. கட்சி விவகாரங்களை பொருத்தவரை பொதுக்குழு முடிவு தான் இறுதியானது. அதை யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் அதிமுக உடைய அடிப்படை உறுப்பினர்களாக தொடர முடியும் என்ற முக்கிய வாதங்களை ஈபிஎஸ் தரப்பு வைத்துள்ளது.