சட்டப்பேரவைக்கான தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் தற்போது அதிமுக தொண்டர்கள் கான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக் கட்சி தொண்டர்களுக்கு எழுதப்பட்டு இருக்கக்கூடிய கடிதத்தில் தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர் அக்கட்சியின் இரண்டு தலைமை நிர்வாகிகள். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் இந்த வேண்டுகோள் விடுத்து இருக்கின்றனர்