Categories
அரசியல்

அதிமுக_வின் நேர்காணல் 2_ஆவது நாளாக தொடங்கியது….!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களின் விருப்பமனு மீது  நேர்காணல் நடைபெற்று வருகின்றது . நேற்று தொடங்கிய நேர்காணல் இரண்டாவதாக இன்றும் அதிமுக தலைமைஅலுவலகத்தில் நடத்து வருகின்றது . காலை மாலை என இரண்டு கட்டமாக நடைபெறும் நேர்காணலில் இன்று காலை திருவள்ளூர் , சென்னை  வடசென்னை , சென்னை மேற்கு , சென்னை தெற்கு , ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் , அரக்கோணம் , வேலூர் , கிருஷ்ணகிரி  மற்றும் தர்மபுரி  தொகுதிக்கு நேர்காணல் நடைபெறுகின்றது.

அதே போல இன்று மலை ஆரணி , திருச்சி , பெரம்பலூர் , திருவண்ணாமலை , கடலூர் , சிதம்பரம் , மயிலாடுதுறை , நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஒன்பது தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகின்றது.ஏற்கனவே நேற்று காலை மாலை என 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |