Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் சின்னத்தை…. எந்த கொம்பனாலும் முடக்க முடியாது – ஜெயக்குமார் காட்டம்…!!

அதிமுக சின்னத்தை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என்று அமைசர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மந்தைவெளியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவரிடம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கும் முயற்சி இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக சின்னத்தை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது” என்று கூறியுள்ளார். மேலும் சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |