Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ரத்து செய்தால்…. உடனே திருப்பி கொடுத்துடுங்க…. கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு….!!

கல்லூரி  சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களுக்கு  அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது. 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால்,  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்படவே,  கவுன்சிலிங் முறை மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான மாணவர்களுக்கு மிக விரைவில் ஆன்லைன் வகுப்பு தொடங்க இருப்பதால், 

அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங்காக  காத்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கு அங்கே சீட் கிடைக்காதோ  என்ற அச்சத்தில், தனியார் கல்லூரிகளில் சென்று சேர்ந்து விடுகின்றனர். இன்னும் சிலரோ தங்களுக்கு பிடித்த  கல்லூரிகளில் சீட்டுக்காக அப்ளை செய்துவிட்டு, அட்டிஷனல் ஆப்ஷன் ஆக பிற கல்லூரிகளிலும் கட்டணத்தை செலுத்தி காத்திருந்து வந்தனர். 

இந்நிலையில் தங்களுக்கு பிடித்த அரசு கல்லூரியிலோ அல்லது தனியார் கல்லூரியிலோ அந்த மாணவர்களுக்கு  அழைப்பு வரும் பட்சத்தில், வேறு கல்லூரியில் கட்டணத்தை செலுத்தி தவிக்கும்  மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிக்கு செல்ல நினைத்து கட்டிய  கட்டணத்தை திருப்பி கேட்டால், அதனை கல்லூரிகள் தர மறுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கல்லூரியில் சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. சேர்க்கை ரத்து செய்த மாணவர்களுக்கு உடனடியாக கட்டணத்தை திருப்பி வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 

Categories

Tech |