Categories
உலக செய்திகள்

‘இனி கவலை வேண்டாம்’…. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊசி…. வழங்க தேசிய சுகாதார அமைப்பு முடிவு….!!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சுகாதார அமைப்பு ஊசி மருந்து வழங்க முடிவு செய்துள்ளது.

எய்ட்ஸ் நோய் முற்றிலும் குணமாக்க முடியாத ஒன்று. ஆனால் இதன் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு நோயாளிகள் தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்த மாத்திரையில் இருந்து விடுதலை பெறும் விதமாக பிரித்தானியாவில் உள்ள NHS என்னும் தேசிய சுகாதார அமைப்பு ஊசி மருந்தை வழங்கவுள்ளது. குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகள் அனைவரும் antiretroviral என்றும் மாத்திரையை தினசரி எடுத்துக் கொள்கின்றனர்.

இதனால் ரத்தத்தில் கிருமிகள் தங்கும் இருப்பினும் மக்களிடையே பரவவோ அல்லது கண்டறிய முடியாத அளவுக்கு குறைவாகவோ இருக்கும். இந்த நிலையில் சுமார் 13,000 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊசி மருந்து வழங்க NHS முடிவு செய்துள்ளது. இதனால் நோயாளிகள் தினசரி சிகிச்சை பெற தேவையில்லை. மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இரு தடுப்பூசிகள் என ஆண்டுக்கு ஆறு தடவை செலுத்திக்கொண்டால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 365 நாட்களும் சிகிச்சை பெரும் மனநிலை எவருக்கும் இனி இருக்காது. இதன் மூலம் சிகிச்சை பெறும் முறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அதிலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு cabotegravir மற்றும் rilpivirine என்ற இரு மருந்துகளும் கலந்து செலுத்தப்படுகிறது. இதற்கு 1637.49 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

மேலும் இது தினசரி மாத்திரைகளுக்கு ஆகும் செலவை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது உண்மை.  இந்த இரண்டு மருந்துகளையும் கலந்து செலுத்தப்படுவதால் வீரியமும் அதிகமாகவே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. குறிப்பாக NHSன் இந்த முடிவை தொண்டு நிறுவனங்கள் வரவேற்பதுடன் மட்டுமின்றி பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |