Categories
அரசியல் மாநில செய்திகள்

எய்ம்ஸ் டாக்டர்ஸ்… யாரு கண்ட்ரோல் ? எங்க கண்ட்ரோலா ? அது மத்திய அரசு கண்ட்ரோல்: சசிகலா

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அம்மா மரணம் தொடர்பான விசாரணையில் என்னைப் பொருத்தவரை என் மனசுக்கு நான்  கிளியரா இருக்கேன். அதனால தமிழ்நாட்டு மக்களும் அத புரிஞ்சுகிட்டாங்க.  எய்ம்ஸ் டாக்டர்ஸ். அது யாரு கண்ட்ரோல் ? எங்க கண்ட்ரோலா ? அது பொதுவானது.  மத்திய அரசு கண்ட்ரோல். அவங்க கொடுக்கிற டீம் ஆப் டாக்டர்ஸ் இருக்காங்க. பிரைவேட் ஹாஸ்பிடலில் உள்ள டாக்டர் இருக்காங்க. எங்க அரசாங்கத்துல இருந்து டாக்டர்கள் இருக்காங்க.

அவங்க தினமும் வந்து அம்மாவுடைய உடல் நிலையை பத்தி அவங்க அறிக்கைகள் கொடுக்கிறாங்க. அப்படி இருக்கும்போது இதில் மறைக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லையே. வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போறதுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த டாக்டர்கள் நேரடியாக அம்மா கிட்ட கேக்குறாங்க. அப்ப அம்மா சொல்றாங்க…  இல்ல வேணாம். எங்க ஸ்டேட்லையே சென்னை மெடிக்கல் ஹப்பு. அதனால் இங்கே இல்லாத ட்ரீட்மென்ட் கிடையாது.

வெளியில் இருந்து டாக்டரை இங்கே கூடப்பிடலாம் அப்படி தான் சொன்னாங்க. எங்களுக்கு வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போகணும்னு ஆசை இருக்கு.  ஆனால் அம்மா ரொம்ப கிளியரா சொல்லிட்டாங்க. இங்கே நல்லா ட்ரீட்மென்ட் நடக்குது. நல்லா தான் இருக்குது. எங்களுக்கு நல்லா இம்ப்ரூவ்மெண்ட் வந்து நல்லா இருந்தாங்க. அன்னைக்கு கூட….  ஈவினிங் அவங்க டிவி பாத்துட்டு இருக்காங்க. நல்லா எல்லாரு கிட்டயும் பேசுவாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |