Categories
தேசிய செய்திகள்

“சரியான பட்டனை அழுத்தியதால் எய்ம்ஸ்”….. அப்ப தமிழகத்தில் வராதா…..? ஜேபி நட்டாவின் சர்ச்சை பேச்சால் புதிய பரபரப்பு…..!!!!!

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 1470 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மருத்துவ மனையின் பணிகள் நடப்பாண்டில் முடிவடைந்தது. கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில் ஜேபி நட்டா தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நீங்கள் இவிஎம் இயந்திரத்தில் சரியான பட்டனை அழுத்தியதால், இன்று மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது பாஜகவுக்கு வாக்களித்ததால் தான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதாக ஜே.பி நட்டா கூறியுள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மதுரையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கவில்லை. இது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய அரசின் மீது முன்வைக்கப்படும் நிலையில், தற்போது ஜே.பி நட்டா பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் எப்போது முடிவடையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Categories

Tech |