Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ. 3500 முதல் ரூ. 10,000 வரை விமான கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு …!!

விமான கட்டணம் அதிகளவில் உயரக்கூடாது என்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விமான போக்குவரத்து 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த  20000 இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டு உள்ளோம்.வெளிநாடுகளில் உண்மையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

உள்நாட்டு விமான கட்டண சேவை குறைந்தபட்சம் 3500 அதிக பட்சம் 10,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவில் மூன்று மாதத்திற்கு உள்நாட்டு விமானக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். விமான கட்டணங்கள் மிகவும் அதிகரிக்கக் கூடாது என்பதால் அரசு கட்டணம் நிர்ணயம் செய்கிறது.நிர்ணயிக்கப்பட்ட உள்நாட்டு விமான கட்டணம் ஆகஸ்ட் 24 வரை வசூலிக்கப்படும்.

டெல்லியிலிருந்து மும்பை செல்ல சராசரி கட்டணம் கிட்டத்தட்ட 6500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது அப்பிள் பயணிகளை சிவப்பாக காட்டினால் அவர் விமானத்தில் பயணிக்க முடியாது. பயணிக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யவே ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |