மத்திய பிரதேச மாநிலத்தில் விதிமுறைகளை மீறி கோவில் திருவிழா நடத்திய கோவில் நிர்வாகிகள் 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் ரட்லாம் மாவட்டத்தில் பார்போட்னா என்ற கிராமத்தில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி காசி யாத்திரை நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலசங்களில் புனித நீர் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைதொடர்ந்து காவல்துறையினர் கோவில் பூசாரி மற்றும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவால்லை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோவில் விழாக்களில் நான்கு பேருக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.