அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமானத்திற்கு விமானியாக முன்னாள் விமானப்படை அதிகாரிகள் சாங் என்பவரை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் 4000 மணிநேரம் விமானம் செலுத்தி அனுபவம் பெற்றவர் என்றும் கூறப்பட்டிருந்தது. விமானத்தை ஓட்ட ஷாங் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மூத்த அதிகாரியின் பெயரில் பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பியது வெளிச்சத்துக்கு வந்தது. அதை தொடர்ந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.