Categories
தேசிய செய்திகள்

தனியார் மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனம்…. மத்திய மந்திரி முடிவு….!!

 மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் மாத இறுதிக்குள் தனியார்மயமாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

புதுடில்லியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா விமான நிறுவனம்’ நாளடைவில் நலிவடைந்து வந்ததால்  அதனை தனியார் மயமாக்க கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்து அறிக்கையை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்த  நடவடிக்கையை இறுதியாக வருகின்ற ஜூன் மாத இறுதிக்குள் ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கு   மாற்றப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப்சிங் பூர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |