Categories
தேசிய செய்திகள்

விமான சேவை ரத்து… ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!

ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா விமானங்களில் பயணிகள் எண்ணிக்கையானது மாட்ரிட், மிலன், கோபன்ஹேகன், வியன்னா போன்ற நகரங்களில் அதிகளவு இல்லாததாலும், செலவுக் குறைப்பு நடவடிக்கையாகவும் இந்த விமான சேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை இயக்குவதற்கு போதுமான நிதிகள் இல்லை என்பதாலும் விமானங்களை இயக்க இப்போது சாத்தியமில்லை. வந்தே பாரத் திட்டத்தின் மூலம், ஏர் இந்தியா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்கிவருகின்றது. மேலும், அந்த நாடுகளுக்கு தேவைப்படும் பொழுது  மீண்டும் விமான சேவைகளைத் தொடங்குவோம் என்று ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ஊடகத்தின் வழியாக கூறியுள்ளது.

சென்ற மாதம், ஏர் இந்தியா வாரத்திற்கு மூன்று முறை ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் இருந்து பாரிஸுக்கும், வாரத்திற்கு நான்கு முறை ஒவ்வொரு திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் டெல்லியில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.  சென்ற ஜூலை மாதம், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் உலகளவில் 2024 ஆம் ஆண்டு வரை பயணிகளின் போக்குவரத்து இயல்பு நிலைகளுக்குத் திரும்பாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |