Categories
தேசிய செய்திகள்

AIR INDIA + கேரள அரசு….. ரூ20,00,000 நிவாரணம்….. வெளியான அறிவிப்பு….!!

கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனமும் கேரள அரசும் தலா ரூபாய் 20 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளனர்.

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளானதில், 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த 12 வயதிற்கு மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது ஏர் இந்தியாவை தொடர்ந்து, கேரள மாநில அரசும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணத் தொகையை வழங்குவதோடு, அவர்களது சிகிச்சைக்கான செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது

Categories

Tech |