ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 8 விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக 5G மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் விமானம் பயணிப்பதற்கு தேவையான அதிநவீன கருவிகளில் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்தது. எனவே, அச்சத்தில் விமான நிலையங்கள் அமெரிக்காவுடனான விமான சேவைகளை ரத்து செய்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிற்குரிய ஏர் இந்தியா நிறுவனமானது அமெரிக்க நாட்டுடனான 8 விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.