காற்று மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து WHO விளக்கமளித்துள்ளது .
காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியான செய்தி ஒன்று காற்றில் வரும் நீர்த்துளிகள் மூலம் பரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என புதிய ஆய்வு கூறுவதாக தெரிவித்துள்ளது. இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கும், கொரோனா நபரின் பொருள்களை பயன்படுத்துவதற்கும் வைரஸ் நீர்த்துளிகள் பட்ட பொருட்களை தொட்டுவிட்டு தங்களின் மூக்கு வாய் அல்லது கண்களைத் தொடும் நபருக்கு மட்டுமே கொரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.