ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று வடக்கு மாகாணம் அல் ஜாஃப்பில் விபத்துக்குள்ளானது.
ஏமன் ராணுவ பகுதிகளுக்கு அருகே சவுதி நாட்டு போர் விமானம் விழுந்ததாக சவுதி கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பொறுப்பேற்றுள்ளனர்.
தரைவழி ஏவுகணைகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதலை நடத்தியதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்கள் சவுதி அரேபியா ஏதும் கூறவில்லை. மேலும் சனிக்கிழமை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கொண்டதாகவும் சில பொதுமக்கள் இதில் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறியது.
https://youtu.be/BBb_uj51_Hc
இந்நிலையியல் சனிக்கிழமை அன்று அல்ஜாஃ ப் அப்பகுதியில் சவுதி கூட்டுப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
சவுதி தலைமையிலான கூட்டுப்படை 2015 முதல் ஏமன் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போராடி வருகிறது குறிப்பிடத்தக்கது.