பிரிட்டனுக்கு விமான சேவையை வரும் 8 ஆம் தேதியிலிருந்து துவங்குவதாக இந்திய விமானத்துறை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பிடியிலிருந்தே இன்னும் மீளாத நிலையில் பிரிட்டனில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல்வேறு உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை தடை செய்தது. இதையடுத்து இந்தியாவும் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அடுத்து ஜனவரி 7-ம் தேதி வரை இந்த தடை நீட்டித்தது. இதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக மத்திய விமானத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும் விமான செல்ல அனுமதி இருந்தாலும் முதல் கட்டமாக 15 விமானங்கள் மட்டுமே டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சேவையை தொடங்கும் என்று புரி தெரிவித்துள்ளார்.