ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அளித்துள்ளது.
தற்போது செல்போன் நெட்வொர்க்கில் ஏர்டெல், ஜீயோ என்ற மாபெரும் கம்பெனிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டியானது நடைபெற்று வருகிறது. பெரும்பாலானோர் ஜியோ பயன்படுத்துகின்றனர். ஏர்டெல்லிருந்து பலர் கட்சி மாறி வருகின்றனர். இதனால் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஏர்டெல் போராடி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஏர்டெல் சிம்மை மாற்றாமல் அதை வைத்து கொண்டு ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் வாடிக்கையாளர்கள் பலர் ஏர்டெல்லுடன் தொடர்பில் இருந்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தற்போது இவர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீண்ட நாட்களாக ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் ஏர்டெல் சிம்மை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு இ GB அதிவேக டேட்டா மற்றும் இன்கம்மிங் அவுட்கோயிங் கால்களை மூன்று நாட்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.