இந்தியாவில் ஏர்டெல் நெட்வொர்க் முதன்மையான நெட்வொர்க்கில் ஒன்றாக இருக்கிறது. கோடிக்கணக்கானோர் பிராட் பேண்ட், செல்போன் வாயிலாக இணையதள வசதி பெற்று வருகிறார்கள். தற்போது ஏராளமானோர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவதால் நெட்வொர்க் இன்றியமையாததாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா முழுவதிலும் இன்று காலை 11 மணியளவில் ஏர்டெல் நெட்வொர்க் முற்றிலும் டவுன் ஆனது. தொழில்நுட்ப காரணத்தால் பயனாளர்கள் நெட்வொர்க் வசதியை பெற முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் மற்ற சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதைதடுத்து ஏர்டெல் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தது.