ஏர்டெல் நிறுவனமானது அதிவேக 5G சேவையை அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தன் அதிவேக 5G நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தி உள்ளது. இந்த லோ லேட்டன்ஸி திறன்வாயிலாக அதிகளவிலான டேட்டாவை மிக குறைந்த நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும். மேலும் ஐஓடி என அழைக்கப்படும் இணையசேவை குறித்து கிளவுட் கேமிங், அணிந்துகொள்ளக்கூடிய சாதனங்கள், ட்ரோன்கள் போன்றவற்றில் 5G செயல்படும் விதம் தொடர்பாகவும் காட்டப்பட்டது.
இதனிடையில் 5G உதவியுடன் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவின் உருவம் ஹோலோகிராமில் உருவாக்கப்பட்டது. கடந்த 1983 உலகக்கோப்பையின் போது கபில் தேவ் 175 ரன்கள் அடித்த காட்சி 5G ஹோலோகிராம் வாயிலாக மறு உருவாக்கம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. ஏர்டெல்லின் 5G சேவையின் வாயிலாக 1 ஜிபிபிஎஸ் வேகத்திற்கு மேல் 20ms லேட்டன்ஸிக்கும் குறைவாக கிடைக்கும் 4கே வீடியோக்களை 50 பயனர்கள் தடை இன்றி ஸ்மார்ட்போனில் கண்டுகளித்தனர். மல்டிபிள் கேமரா ஆங்கிள், 360 டிகிரி இன் ஸ்டேடியம் காட்சி, ஷாட் அனாலிசிஸ் போன்றவையும் 5G வாயிலாக காட்டப்பட்டது.
இந்த 5G சேவை வாயிலாக துல்லியமான ஹோலோகிராம்களை உருவாக்கி எந்த இடத்திற்கு வேண்டுமனாலும் அனுப்ப முடியும். அத்துடன் இணைய சந்திப்பு, இணைய நிகழ்ச்சி, நேரலை செய்திகள் போன்றவற்றில் இந்த ஹோலோகிராம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஆகவே இன்னும் 2 மாதத்தில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்த வருட சுதந்திர தினத்தின் போது 5G சேவை அறிமுகம் செய்யப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.