பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாகிய பார்தி ஏர்டெல் நிறுவனமானது ஹரியானா, ஒடிசா போன்ற நகரங்களில் அதன் 28 வேலிடிட்டி உடனான குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57% அதிகரித்து ரூபாய்.155-ஆக உயர்த்தி உள்ளது. இதற்கிடையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்சமான ரீசார்ஜ் திட்டம் ரூபாய்.99-ஐ நிறுத்திவிட்டது.
எனினும் வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் 200 மெகாபைட் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகிறது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் ரூபாய்.155-க்கு ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 1GP டேட்டா மற்றும் 300 SMS-களை வழங்குகிறது. இப்போது சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ள இத்திட்டத்தினை நிறுவனம் விரைவில் இந்தியா முழுவதும் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.