ஏர்டெல் நிறுவனம் சென்னை, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் 5g சேவை பயன்பாட்டுக்கு வந்ததாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த 5 ஜி சேவை தற்போது 4 ஜி கட்டணத்திலேயே கிடைக்கும் என்றும் விரைவில் 5g சேவைக்கான புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் வருடத்திற்கு இந்தியா முழுவதும் 5g சேவை வழங்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஏர்டெல் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் ஏர்டெல் 5 சேவையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.