இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) ஹைதராபாத் நகரில் தனது 5 ஜி சேவையை வெற்றிகராமக டெமோ செய்து பார்த்துள்ளது. இதனால், 5 ஜி சேவையை வெற்றிகரமாக பரிசோதித்ததன் மூலம் நாட்டிலேயே 5 ஜி சேவையை தொடங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது.
இது தொடர்பாக, நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்ததாவது:-
‘தொழில்நுட்ப நகரமான ஹைதராபாத்தில் இன்று இந்த நம்பமுடியாத திறனை வெளிப்படுத்த அயராது உழைத்த எங்கள் பொறியாளர்கள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். 5 ஜி நேரலை நிகழ்த்திய முதல் நிறுவனமாக ஏர்டெல் ஆனது இந்த திறனை நிரூபிக்கும் முதல் ஆபரேட்டராக ஏர்டெல் மாறிவிட்டது என்றும், இதன் மூலம் இந்தியாவில் எல்லா இடங்களிலும் உள்ள இந்தியர்களை மேம்படுத்துவதற்கான எங்கள் தேடலில் புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுப்பதில் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்பதை மீண்டும் காட்டியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.