இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம்.
ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது, இலவச அமேசான் ப்ரைம், இலவச ஹாலோடூனின் நன்மைகளைப் பெறுகிறார்கள்.
ஜியோவின் ரூ.349 திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 SMS எந்த நெட்வொர்க்கிலும் கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி மொத்தம் 28 நாட்கள். இந்த திட்டத்தில் மொத்தம் 84GB டேட்டா கிடைக்கிறது.