ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது
ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக டிடிஹச், போஸ்ட்பெய்ட் மற்றும் பைபர் போன்ற சேவைகளுக்கு பயனர்கள் ஒரே பில் மூலமாக பணத்தை செலுத்தி கொள்ளலாம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் பயனர்கள் கஸ்டமர் கேர் என்னை தொடர்பு கொண்டு எந்தெந்த சேவைகளை ஒன்றாக இணைத்து அதற்கான பில்லை பெற வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்று இரண்டுக்கும் அதிகமான சேவைகளுக்கு ஒரே பில்லாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த புதிய திட்டமான ஏர்டெல் பிளாக் பிக்ஸ்ட் ஆரம்ப விலை ரூபாய் 998 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம்
- 2 போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்பு மற்றும் பைபர் கனெக்சனிற்கு மாதம் ரூ.1598
- டிடிஹச் கனெக்சன், பைபர் மற்றும் 3 போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்பிற்கு ரூ.2099
- 2 போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்பு மற்றும் டிடிஹச் கனெக்சனிற்கு ரூ. 998
பயனர்களுக்கு இந்த சலுகை பிடிக்காத பட்சத்தில் அவர்களுக்கென்று சொந்தமாக ஏர்டெல் பிளாக் திட்டம் ஒன்றை தயார் செய்து கொள்ளலாம். இதற்கு இரண்டிற்கும் மேற்பட்ட சேவைகளை இணைத்திருக்க வேண்டும். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.