இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவையை துவங்கி வைக்கிறார். 5ஜி சேவைக்கான அலைவரிசை ஏலம் அனைத்துமே முடிந்து விட்டது. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்திலும், ஏர்டெல் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
மேலும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இதனையடுத்து வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏர்டெல், ஜியோ. வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை உடனே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.