நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் ஜியோ, ஏர்டெல், விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது ஜியோ சிம் கார்டுக்கு போட்டியாக ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் முந்தியடித்து கொண்டு பல ஆஃபர்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 15% முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.