இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் அனைத்து இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஏப்ரல் நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வழங்கியது. ஆனால் இந்த புதிய ரூ.155 ரீசாஜ் திட்டம் வெறும் 24 மட்டுமே வேலிடிட்டி கொண்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக தொகை செலுத்தி குறைந்தபட்ச நாட்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தை பெற முடியும். இதனால் பல வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏர்டெல் சிம் கார்ட் இரண்டாவது தேவை சிம் என்று பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூட இனி இந்த குறைந்தபட்சம் ரூ.155 திட்டத்தை விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் முதல் கட்டமாக ஹரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் அனைத்து மாநிலங்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்த திட்டத்தில் 1GB டேட்டா 300 SMS அனுப்பலாம். இதில் நமக்கு Wynk மற்றும் ஹலோ டியூன் வசதிகள் கிடைக்கிறது. அதிக விலைக்கு குறைந்த பலன்கள் வழங்கும் எந்த ஒரு திட்டமும் நல்ல திட்டமாக வாடிக்கையாளர் கருத மாட்டார்கள். அதில் குறைந்த கால வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு வரும் என்பதை தெரியாது. வேறு வழி தெரியாத வாடிக்கையாளர் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தே ஆக வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் vi & BSNL போன்ற நிறுவனங்கள் நோக்கி அவர்களின் கவனத்தை திருப்பலாம். இதனைப் போல ஒரு குறைந்த பற்று ரூ.99 திட்டம் Vi நிறுவனம் 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதில் 200MB டேட்டா மற்றும் ரூ.99 டாக் டைம் கிடைக்கிறது. இதில் அவுட்கோயிங், எஸ்எம்எஸ் இல்லை. இந்த திட்டம் பெரிய அளவு மக்களை ஈர்க்ககூடியதாக இல்லை என்றால் இரண்டாவது சிம் பயன்படுத்தவர்களுக்கு இந்த ரூ.99 திட்டம் போதுமானதாக இருக்கும்.