ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி வரை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதே சிம்கார்டு சேவையில் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிபோட்டு இயங்கி வருகின்றனர். எந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிகம் கவருகிறதோ அவர்களே மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பெறுகின்றனர். தற்போது மொபைல் சிம் போட்டி உலகில் ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தாலும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லின் சேவையை மனதார ஏற்று கணக்கில் கொண்டு அதை விட்டு பிரியாமல் இருக்கின்றனர்.
அப்படி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனமும் அவ்வப்போது சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 2 ஜிபி வரை டேட்டாவை தற்போது வழங்குகிறது. இதற்கு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெப்ஸிகோவின் பொருட்களான லேஸ், குர்குரே உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும். பின் அதனுள் கொடுக்கப்பட்டிருக்கும் 12 இலக்க ப்ரோமோ கோடை ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் பதிவேற்றினால் வாங்கிய பொருளின் விலையை பொறுத்து டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.