ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ரீசார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஜியோ, பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல் போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த ஆப்பர்களை அவ்வபோது வழங்கி வருகின்றனர். ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை அவ்வபோது வழங்கி வருகின்றது. அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் கூப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூபாய் 199 க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 35 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சாதாரணமாக ரூபாய் 199 திட்டத்தில் ஒரு ஜிபி டேட்டா வுக்கு, 24 நாட்கள் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அறிவிப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.