Categories
தேசிய செய்திகள்

Airtel, VI&Jio வாடிக்கையாளர்களுக்கு…. எதிலெல்லாம் இலவச சந்தா?… இதோ மொத்த லிஸ்ட்….!!!

தற்போதெல்லாம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களுடன் சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் சாதாரண கேஷ் பேக் முதல் ஸ்ட்ரீமிங் சேவையின் இலவச சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் பார்ப்பதற்கு சிறந்த லாபமாக தெரிந்தாலும் இதற்கான ரீசார்ஜ் திட்டங்கள் சற்று கண்ணைக்கட்ட தான் வைக்கிறது. அன்மையில் முன்னணி OTT தலமான நெட்ஃபிக்ஸ் தனது ஸ்ட்ரீமிங் சேவையின் திட்டங்களுக்கான விலைகளை குறைத்தது.

அதேசமயம் அமேசான் பிரைம் இப்போது சந்தா கட்டணத்தை அதிகரித்து உள்ளது. பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளின் மாறிவரும் விலைகளுடன், பயனர்கள் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாறலாம். இதற்காகதான் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டத்தில் இந்த வகையான சலுகைகளை வழங்குகிறது. அந்த வகையில் இனி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்றவற்றின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து ஸ்ட்ரீமிங் சந்தாக்களை நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இவற்றில் முதலாவதாக

ஏர்டெல்:

ஏர்டெல் தற்போது பிரேம் வீடியோ மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாக்களைத் தொகுக்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது.  இதில் 108 ரூபாய்க்கான ஆட்-ஆன் திட்டம் 6 GB மொத்த டேட்டா உடன், அப்போதைய திட்டத்தின் செல்லுபடி காலம் வரை வருகிறது. இத்திட்டம் 30 தினங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. அடுத்ததாக 599 ரூபாய் திட்டம் ஒரு நாளைக்கு 3 GB டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் 838 ரூபாய் திட்டம் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை  56 நாட்களுக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி வருடாந்திர 3,359 ரூபாய் திட்டம் ஒரு நாளைக்கு 2 GB-யுடன் 365 நாட்களுக்கு வழங்குகிறது.

இந்த திட்டங்கள் அனைத்தும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இது டிஸ்னி+ஹாட்ஸ்டார்க்கான அடிப்படை சந்தா என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன் சில ப்ரீபெய்டு திட்டங்களையும் கொண்டு உள்ளது. அந்த அடிப்படையில் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை வழங்கும் 359 ரூ திட்டமானது, 28 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தா உடன் வருகிறது. அதுவே 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 GB டேட்டாவுடன் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் சந்தாவை வழங்கும் 699 ரூ திட்டமும் உள்ளது.

இந்த அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தாவை மொபைல் சாதனத்தில் மட்டுமே அணுக முடியும். போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கு வரும்போது, ஏர்டெல் 499 ரூ மாதாந்திர திட்டத்தை 75 GB டேட்டாவை ரோல் ஓவருடன் வழங்குகிறது. இதனைத்தொடர்ந்து 999 ரூ மாதாந்திர திட்டம் மற்றும் 1,599 ரூபாய் மாதாந்திர திட்டங்களிலும் ஒரு வருட அமேசன் பிரைம் உறுப்பினர் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் திட்ட உறுப்பினர் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த மொபைல் திட்டம் ஆண்டுக்கு 499 ரூ செலவாகும். மேலும் ஒரு சாதனத்தில் HD உள்ளடக்கத்திற்கான அணுகலை மட்டுமே வழங்குகிறது.

வோடபோன் ஐடியா:

வோடபோன் ஐடியா தொகுக்கப்பட்ட சந்தாக்களுடன் வரும் 4 ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் தினசரி 3 GB டேட்டா வழங்கும் 501 ரூ திட்டம் 28 நாட்களுக்கும், 701 ரூ திட்டத்தில் 3 GB டேட்டாவை 56 நாட்களுக்கும், 901 ரூ திட்டத்தில் 3 GB டேட்டாவை 84 நாட்களுக்கும் வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கான டிஸ்னி +ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகின்றது.

வோடபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு 499 ரூ திட்டம் 75 GB டேட்டாவை வழங்குகிறது மற்றும் அமேசான் பிரைம் சந்தா மற்றும் ஒரு ஆண்டுக்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. இதை தவிர வரம்பற்ற டேட்டாவை வழங்கும் 699 ரூ  திட்டத்திலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக Netflix, Amazon Prime Video மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைலின் வருடாந்திர தொகுக்கப்பட்ட சகாக்களுடன் வரம்பற்ற டேட்டாவை வழங்கும் 1099 ரூ மதிப்புள்ள VI RedX  போஸ்ட்பெய்டு திட்டமும் இதில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் 4 பிரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இவை 601 ரூ, 799 ரூ, 1,066 ரூ மற்றும் 3,119 ரூ திட்டங்கள் ஆகும். இதில் 61 ரூ திட்டமானது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 GB டேட்டாவையும், 799 ரூ திட்டமானது 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வையும் 1066 ரூபாய் திட்டமானது எண்பத்தி நான்கு நாட்களுக்கு 2 GB டேட்டா வையும், 3,119 ரூ திட்டமானது ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவையும் 365 நாட்களுக்கு வழங்குகிறது.

போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ 5 திட்டங்களை வழங்குகிறது. இதில் 75 GB வழங்கும் 399 ரூ திட்டமும், 100 GB வழங்கும் 599 ரூ திட்டமும், 150 GB வழங்கும் 799 ரூ திட்டமும், 200 GB வழங்கும் 999 ரூ திட்டமும், 300 GB டேட்டாவை வழங்கும் 1,499 ரூபாய் திட்டமும் அடங்கும். இந்த திட்டங்கள் அனைத்தும் மாதந்தோறும் செலுத்தப்படும் Netflix, Amazon Prime Video மற்றும் Disney+Hotstar போன்றவற்றின் ஒரு வருட சந்தாவை உள்ளடக்கியது ஆகும்.

Categories

Tech |