இந்தியாவில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வைத்தார். 5ஜி அழைக்கசற்றை சேவை ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ஜியோ நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபலமான ஏர்டல் நிறுவனம் இந்தியாவில் உள்ள வாரணாசி, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் முதற்கட்ட துவக்கமாக 5ஜி சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்த நகரங்களில் 5 ஜி சேவையானது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் இந்தியா முழுவதும் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ஏர்டல் நிறுவனமானது 5ஜி சேவையை தொடங்கிய சில நாட்களிலேயே 10 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் நல்ல கருத்துக்கள் ஊக்கமளிப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.