நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுசை காதலித்து கடந்த 2004 ஆம் வருடத்தில் திருமணம் செய்தார்.இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக தங்கள் இணையதள பக்கங்களில் அறிவித்தார்கள்.
அதன்பின்பு, இருவரும் தங்கள் படப்பிடிப்புகளில் பிஸியாகி விட்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன் இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, அதிக பாதுகாப்புடன் இருந்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
https://www.instagram.com/p/CZcKJ9XPKLO/
மருத்துவமனையில் இருக்கிறேன். தயவு செய்து முகக்கவசம் அணிந்து கொண்டு பாதுகாப்புடன் இருங்கள். இந்த 2022 ஆம் வருடம் மேலும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.