ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கணவர் தனுஷை பிரிந்த பின் எந்தவித குழப்பமுமின்றி காதல் பாடலை இயக்குவதற்கு ஹைதராபாத் சென்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தனுஷிற்கும் திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எந்தவித கவலையும் இல்லாமல் காதல் பாடல் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுவிட்டார்.
அங்கு, அவர் தன் படக்குழுவினருடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. கணவரை பிரிந்த பின் உடனடியாக காதல் பாடலை இயக்குவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அது ஐஸ்வர்யாவிற்கு உள்ளது என்றும் வேதனையான இந்த தருணத்தில் எவ்வாறு அவரால் காதல் பாடலை இயக்க முடிகிறதோ? என்றும் ரஜினி ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
காதல் பாடல் படம் பிடிப்பதற்காக ஐஸ்வர்யா தங்கியிருக்கும் அதே ஓட்டலில் தான், வாத்தி படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற தனுஷூம் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.