Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்….? வெளியான புதிய தகவல்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் தமிழிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2007-ம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 10 வயதில் ஆராதியா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தமிழில் எந்திரன் மற்றும் ராவணன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பிறகு தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் நடந்து செல்லும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தனர். மேலும் கர்ப்பமாக இருக்கும் தகவலுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும், மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |