ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் இவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அம்மா, தங்கை,நாயகி என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிக் காட்டி வருகிறார்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த எந்த படத்திலும் அவர் கவர்ச்சியுடன் நடிக்கவில்லை. ஆகையால் இவரை குடும்ப குத்துவிளக்கு என்று சொல்லி வருகின்றனர். இப்போது அவர் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது இணையத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. ஏனென்றால் குடும்ப குத்து விளக்கு என்று ரசிகர்களால் பாராட்டப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது குட்டி பாவாடை அணிந்து ஒரு சேரில் அமர்ந்தவாறு போட்டோவை எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இருப்பினும் குடும்ப குத்து விளக்கு என்று கூறிய ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த புகைப்படத்திற்கு அதிர்ப்தி தெரிவித்து வருகின்றனர்.