பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்தில் கலைமாமணி விருதைப் பெற்றார். இதை தொடர்ந்து இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருப்பினும் சில திரைப்பட நடிகர்கள் தங்களது மன நிலையை சீராக வைத்துக் அவ்வப்போது சுற்றுலா பயணம் மேற்கொள்வர்.
அதனைப் போல் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு எடுத்துள்ள வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சீபிளேனில் மாலத்தீவை 30நிமிடம் சுற்றிப் பார்ப்பது சூப்பராக இருந்தது என்றும் இதனை ஏற்பாடு செய்து கொடுத்த மாலத்தீவு போக்குவரத்திற்கும் நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இரவு உணவு சாப்பிட்ட அவர் “நிலவொளியின் கீழ் இரவு உணவு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CMCIfJVHqF6/
https://www.instagram.com/p/CMFYLvuHA-4/