முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. மேலும் சில திரை பிரபலங்களும் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பலர் தங்களுக்கான தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கான கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CPlEosupU9B/?utm_medium=copy_link